Movie prime

இன்று பெங்களூரில் முழு அடைப்பு!! காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு!!

 
kaveri
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பெரும்பாலான அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
strike
இந்நிலையில், கரும்பு விவசாயிகள், கன்னட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக, தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டதால் பெங்களூர் செல்லும் பயணிகள் அவதியடைந்தனர். சேலம் கோட்டத்தில் 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் 80 பேருந்துகள் என்று 430 பேருந்துகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
bus strike
பெங்களூரு சென்ற தமிழர்கள் மீண்டும் ஓசூர் திரும்பும் வகையில் தமிழக எல்லையான ஜூஜூவாடியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.