Movie prime

அம்மனுக்கு காணிக்கையாக எடைக்கு எடை தக்காளியை செலுத்திய தம்பதி!!

 
thulabaram
தற்போது விலை உயர்வால் அதிக ட்ரெண்டிங்கில் இருக்கும் காய்கறி, தக்காளி. அதன் காரணமாக, தக்காளியை திருமணத்திற்கு பரிசளிப்பது, சீர் வரிசையில் முக்கிய இடம் கொடுப்பது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும், சில இடங்களில் தக்காளியை பாதுகாப்பதற்க்காக சிசிடிவி கேமரா பொருத்துவது, தக்காளி வியாபாரி ஒருவர் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை ஏற்பாடு செய்தது போன்ற பல வித்தியாசமான சம்பவங்களும் நடைபெற்றது.
tomato
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அனகப்பள்ளி மாவட்டத்தில் நுகலம்மா கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் துலாபாரம் வேண்டுதல் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பா ராவ் - மோகினி என்ற தர்மப்படியினர் தங்கள் மகள் பவிஷ்யாவின் எடைக்கு எடை நிகரான தக்காளியை துலாபாரத்தில் அர்ச்சனை செய்துள்ளனர்.
tomato
இதனால் அம்மனுக்கு 51 கிலோ தக்காளி பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது, இதை கோவிலின் நித்திய அன்னதான நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ₹160 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.