Movie prime

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!! 2,862 ஆக உயர்வு!!

 
morocco earthquake
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.11 மணி அளவில் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், மொராக்கோவின் முக்கிய நகரமான  மரகேஷிலிருந்து தென்மேற்கே 71 கி.மீ. தொலைவில் 18.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.
morocco earthquake
ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. 19 நிமிடங்கள் வரை தீவிர தன்மையுடன் இருந்த இந்த நிலநடுக்கம் அதன் பிறகு 4.9 ரிக்டர் அளவில்  பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டு பொதுமக்கள் நள்ளிரவில் பதற்றம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
death
இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2012 டில் இருந்து 2,862 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2562 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.