Movie prime

15,000 கடந்த பலி எண்ணிக்கை!! துருக்கி, சிரியா நாடுகளில் சோகம்!!

 
turkey deaths
துருக்கி, சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி அன்று காலை மத்திய துருக்கி - சிரியா நாடுகளின் எல்லைப் பகுதியில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
earthquake
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் குலுங்கி சேதம் அடைந்துள்ளன. துருக்கி நாட்டை சேர்ந்த 10,000 பேரிடர் மீட்பு குழுவினர்களோடு 24 நாட்டை சேர்ந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்த பயங்கர விபத்தில் சிக்கி 15,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பயங்கர விபத்தில் சிக்கி இதுவரை துருக்கியில் மட்டும் 12,391 மற்றும் சிரியாவில் 2,992 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
earthquake
இதனால், அந்நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு உதவி வருகின்றன.