Movie prime

இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த முடிவு!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

 
students
12 ஆம் தேதி தொடங்க உள்ள 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
education minister
முன்னதாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் கோடை வெப்பம் தணியாத நிலையில் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விடுமுறை நீடிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
School leave
மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் அனைத்து படங்களுக்கும் 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அந்த பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.