Movie prime

தடம் புரண்ட ரயில்!! ஆயிரக்கணக்கான பயணிகள் நிலை!!

 
train accident
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் செல்லும் ரயில், கோதாவரி எக்ஸ்பிரஸ்.
godavari express
இந்த ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிப்பர். அதே போல், இன்று காலை வழக்கம் போல விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பி சென்று கொண்டிருந்த ரயில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் அருகே உள்ள பி.பி.நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
train accident
எதிர்பாராமல் ரயில் தடம் புரண்டதை தொடர்ந்து அடுத்தடுத்து ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த நிகழ்வின் போது ரயிலில் பயணித்த பயணிகள் பூகம்பம் ஏற்பட்டது போல் உணர்ந்ததாக கூறினர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.