Movie prime

தனியார் பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் கடும் எச்சரிக்கை!!

 
teachers
தமிழ்நாட்டில் தற்போது 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இன்னும் இரண்டு நாட்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நிறைவடைய உள்ளன. இந்நிலையில், ஏற்கனவே நிறைவடைந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர்.
paper correction
இந்நிலையில், தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக வர வேண்டும்.
Teachers exam
அவ்வாறு விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்று எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 10 ஆம் தேதிக்குள் 12, 11, மற்றும் 10 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.