Movie prime

அதிகாலையில் பரபரப்பு!! சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளம்!!

 
nayar road
சென்னை தியாகராய நகரில் உள்ள நாயர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளில் நாயர் சாலையும் ஒன்று.
tnagar
இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த நாயர் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் 3 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்டுள்ளது. அதிகாலையில் பள்ளம் ஏற்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
nayar road
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போக்குவரத்து காவல்துறையினர் இந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைந்துள்ளனர். அதிகாலையில் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.