இன்று முதல் மின் கட்டண உயர்வு அமல்!! எவ்வளவு தெரியுமா??
Jul 1, 2023, 09:05 IST

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. இருந்த போதும், தமிழக மின்வாரியத்திற்கு ₹1,65,000 கோடி கடன் இருந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த ஐந்து ஆண்டுக்கு, ஆண்டுக்கு 6% அல்லது ஐந்து ஆண்டுகளில் 30% மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தியிருந்தது.

அந்த வகையில், தமிழ்நாடு மின்வாரியம் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் 13 பைசா முதல் 27 பைசா வரை மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் எந்த விதத்திலும் அதிகரிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண அதிகரிக்க இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இன்று முதல் யூனிட் ஒன்றுக்கு ₹11 இல் இருந்து ₹11.25 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.