Movie prime

எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!! டிவிட்டரின் பெயர், லோகோ மாற்றம்!!

 
elon musk twitter
எலான் மஸ்க் கடந்த ஆண்டு பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அவர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய நாளில் இருந்து அடிக்கடி பல அதிரடி திருப்பங்களை செய்து வந்தார். டிவிட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு நீல நிற டிக்கிற்கு கட்டணம் வசூலித்தார். டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்களை மீண்டும் இணைத்தார்.
elon musk twitter
மேலும், பல பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்ட மஸ்க் தற்போது புதிய அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி, டிவிட்டர் நிறுவனத்தின் பெயரையும், லோகோவையும் மாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் எல்லா நீல நிற பறவைகளுக்கும் விரைவில் விடுதலை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
twitter x
மேலும், டிவிட்டரின் லோகோ எக்ஸ் ஆக மாற்றப்படும் என்றும், இன்று இரவு லோகோ வெளியிடப்பட்டு நாளை உலக முழுவதும் பயண்பாட்டிற்கு அனுப்படும் என்றும் இந்த மாற்றம் எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.