பொறியியல் பட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!!
Jun 26, 2023, 09:19 IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1,54,000 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வரை நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 1,29,167 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1,55,124 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த 20 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இன்று பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகிறது.

மாணவர்கள் இணையதளம் வாயிலாக தரவரிசை பட்டியலை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை தரவரிசை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளது.