Movie prime

அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும்!! பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!!

 
tamil
பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள், வருகைப்பதிவு போன்றவற்றில் ஆசிரியரால் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
tamil
டி.பி.ஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயரையும், கையொப்பத்தையும் தமிழிலேயே இட வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை குறிப்பிட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
seithi kuripu
பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி அணைத்து இடங்களிலும் தங்களின் பெயரை எழுதும் போதும், கையொப்பம் இடும் போது தமிழிலேயே இட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.