ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை!!
Mar 22, 2023, 10:09 IST

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதை தொடர்ந்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். தி.மு.க ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை விட 66,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும், அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.