Movie prime

ஏப்ரல் 1 முதல் டாஸ்மாக்கில் சரக்கு பாட்டிலுக்கு கூடுதல் ₹10!! ஆட்சியர் உத்தரவு!!

 
tasmac
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இனி சரக்கு வாங்கும் போது, ஒரு பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள், சரக்கடித்து விட்டு, காலி மதுபாட்டில்களை பொது வழிகளிலும், வனவிலங்குகள் நடமாடும் இடங்களிலும் போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டம் கோவையிலும் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
saraku bottle
நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் காலி மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசி விட்டும், உடைத்து விட்டும் போட்டுச் செல்கின்றனர். இவ்வாறு வீசப்படும் காலி மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்திரவிட்டது.

இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. மேலும், இந்த திட்டத்தை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
saraku bottle
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வெளியிட்ட அறிக்கையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ₹10 பெறப்படும் என்றும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து ₹10 பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.