10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் 5 மதிப்பெண்கள்!! தேர்வுத்துறை அறிவிப்பு!!
Updated: Apr 24, 2023, 10:37 IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடைந்தன. ஏற்கனவே 12 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து, மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 10 ஆம் தேதிக்குள் 12, 11 ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மே 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில படத்தின் வினாத்தாளில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால், 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் சேர்த்து 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அந்த கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சி செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.