Movie prime

தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!! அமைச்சர் அறிவிப்பு!!

 
child with mask
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 6050 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
corona test
இதில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக கேரளா மாநிலம் உள்ளது. தமிழ்நாட்டில் விமான நிலையங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
corona new
தமிழ்நாட்டில், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் லாக்டவுனுக்கு வாய்ப்பு உள்ளதா என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.