Movie prime

இன்று முதல் தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம்!! அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு!!

 
child with mask
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. தொற்று அறிகுறி உள்ளவர்களிடம் பரிசோதனையை மேற்கொள்வது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
corona test
சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெரம்பூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை. இது தவிர உள்ள 35 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
corona new
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளார். அதனால், அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.