Movie prime

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் தாயார் மரணம்!! முதல்வர் இரங்கல்!!

 
ops mother
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் நேற்று காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளம் என்ற ஊரில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் யின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். 95 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ops
ஓபிஎஸ் என்று பொதுவாக அழைக்கப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இவர் தமிழகத்தின் 6 ஆவது முதலமைச்சராக 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக 11 முறை தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

தற்போது, இவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் இவரது தாயார் பழனியம்மாள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அதன் காரணமாக, சென்னையில் இருந்து நேற்று இரவே ஓபிஎஸ் தேனிக்கு திரும்பி உள்ளார். ஓபிஎஸ் துக்கத்தில் தனது தாயின் பாதங்களில் கதறி அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ops mother
பல்வேறு தரப்பினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இது குறித்து தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.