Movie prime

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி!! 80,000 மாணவர்கள் விண்ணப்பம்!!

 
kids
தமிழ்நாட்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி துவங்கியது. இதில் கடந்த 10 நாட்களில் 80,000 திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் கூறியுள்ளார்.
kids
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
kids
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 8,000 தனியார் பள்ளிகளில், 88,000 இடங்கள் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி இந்த இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. மேலும், மே 18 ஆம் தேதி வரை இந்த இடங்களுக்கு பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிவு தொடங்கிய 10 நாட்களில் 80,000 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசின் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவர்களின் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.