Movie prime

இன்று முதல் மாணவிகள் மாதந்தோறும் ₹1000 உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!

 
girls
தமிழக அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
college
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 5, முதல் தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ₹1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உடைய மாணவிகள் அதிகாரப்பூர்வமான www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
tn assembly
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி படிக்கும் நிறுவனங்களில் 4 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.