Movie prime

வேலை தேடும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 2,674 காலியிடங்கள் அறிவிப்பு!!

 
Exams
ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும், சமூக நல அலுவலர் பதவிக்கு திறமையும், ஆர்வமும்  உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 2674 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
exams
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சமூக நல அலுவலர் பணி, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சுருக்கெழுத்தர் பணி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2674 சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant), 185 சுருக்கெழுத்தர் பணி (stenographer-Group C) ஆகிய காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமூக நல அலுவலர் பதவிக்கு எழுத்துத் தேர்வு, கணினி திறனறிவு தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். சுருக்கெழுத்தர் பதவிக்கு எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்தர் திறன் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
tnpsc exams
மேலும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 26.04.2023 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  recruitment.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.