Movie prime

சிறப்பு டூடுள் வெளியிட்டு 25 ஆவது பர்த்டே கொண்டாடும் கூகுள்!!

 
google
பொழுதுபோக்கு , அறிவியல், சமையல், கலை, கலாச்சாரம், மேப் , மருத்துவம், விஞ்ஞானம், விளையாட்டு, தொழில்நுட்பம் என அனைத்து விதமான தகவல்களுக்கும் ஒரே தேர்வு கூகுள் என சொல்லும் அளவுக்கு அசாத்திய வளர்ச்சி. இதன் வளர்ச்சியால் மனித குலத்தின் வாழ்க்கை முறையே பல படி மேலேறி உள்ளது என்றால் மிகையில்லை என  கருதப்படும் அளவுக்கு அது முன்னணி தேடியந்திரமாக மாறி விட்டது. கூகுள் இல்லையெனில்  யாரும் எதையும் பார்க்க முடியாது என்ற நிலை உருவாகி விட்டது.  
google
என்ன  பெயர் வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி என்ன இனிஷியல் வைக்கலாம்   என்பதைக் கூட கூகுள்-ஐ பயன்படுத்திதான், அறிந்து கொள்கிறார்கள். இத்தனை பெருமை நிறைந்த கூகுள் தேடு பொறிக்கு இன்று 25வது பிறந்தநாள் சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகளை படைத்து ஜொலித்துக் கொண்டிருக்கும் நிறுவனம் கூகுள். தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது. செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம்   செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இணைந்து தொடங்கினர். தற்போது உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடுபொறியாக கூகுள் உயர்ந்து இருக்கிறது.
google
கலிபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் இணைந்து  1998ல் இணைந்து  தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் நிறுவன‌ம் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பியுள்ள நிலையில், இதன் மொத்த தொழில்களும் ஆல்ஃபாபெட் என்ற குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கூகுளின் பிறந்த நாளையொட்டி  சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.