அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!! 5 பேர் பலி!! ₹2 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு!!
Jun 26, 2023, 07:24 IST

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது எதிரே வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பலி. திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்பை தாண்டி எதிர் திசை சாலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த கல்கொத்தனூர் பிரிவு சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் வழித்தடம் மாறி வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த சுமார் 15 அடி பள்ளத்தில் பேருந்தும் காரும் கவிழ்ந்து, இடிபாடுகளில் சிக்கி கொண்டது.
விபத்தின் பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பலரும் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். அதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு மீட்டு மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரையும், பேருந்தையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு தூக்கி பார்த்த போது காரில் பயணித்த 5 நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 40 க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்து மீட்டு மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ₹2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.