பெரும் சோகம்!! 14 பேர் ஒரே நாளில் மின்னல் தாக்கி உயிரிழப்பு!!
Apr 29, 2023, 08:06 IST

ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் மேற்கு வங்க மாநிலத்தில் 14 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை மழைக்காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மழை பெய்யும் போதும், இடி இடிக்கும் போதும் திறந்த வெளியிலோ, மரத்தின் அருகிலோ இருப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம். நாடு முழுவதுமே ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் கத்திரி வெயில் துவங்க உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும், இந்த கோடை வெயில் காலத்தில், வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? போன்ற அறிவுரைகளை மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.
இந்நிலையில், பல மாநிலங்களில் கோடை மழை பெய்து வெயிலின் தாக்கத்தை சற்று குளிர்வித்து வருகிறது. இதனிடையே அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் போன்ற பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதேபோல பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என்று மொத்தம் 14 பேர் மின்னல் தாக்கியதில் பலியாகியுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்றும் அவர்கள் வயல்களில் வேலை செய்யும் போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறியுள்ளார்.