8 மாதங்களுக்கு பிறகு வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகள்!!
Mar 25, 2023, 07:45 IST

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல மாதங்களாக தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்து இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.