Movie prime

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!! அதிரடியாக குறைந்துள்ள தக்காளியின் விலை!!

 
tomato

காய்கறிகளின் விலை அந்தந்த கால நிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். அந்த வகையில், தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை அதிரடியாக அதிகரித்து செய்திகளில் பேசு பொருளாக மாறியுள்ளது.

tomato

பருவநிலை மாற்றம், வரத்து குறைவு  போன்ற காரணங்களால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தக்காளியின் விலை அதிரடியாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், மாநில அரசு தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் இன்னும் தக்காளியின் விலை குறையவில்லை.

tomato

அந்த வகையில், நேற்றைய விலையை விட தக்காளி இன்று ₹40 குறைந்துள்ளது. அதனால், ₹180 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ₹140 க்கு விற்கப்படுகிறது. நேற்று கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தக்காளியை வாங்க வடமாநில வணிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் தமிழ்நாட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் விளைச்சல் அதிகரிக்காமல் தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வணிகர்கள் தெரிவித்தனர்.