Movie prime

மகிழ்ச்சியில் மாணவர்கள்!! அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!!

 
School leave
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அவ்வப்போது பல்வேறு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, பொது அறிவு, தன்னம்பிக்கை, தனித்திறன் ஆகியவை மேம்படுகிறது.
palikalvithurai
தற்போது, அந்த வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
students
மாநில அளவில் அந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.