Movie prime

மகிழ்ச்சியில் மாணவர்கள்!! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
leave
தமிழ்நாட்டில் பொது விடுமுறைகள் தவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்கள், தேரோட்டங்கள் போன்ற விழாக்களின் காரணங்களால் அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
thakkalai festival
ஆண்டுதோறும் தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லாவின் ஆண்டு விழா தக்கலை அஞ்சுவண்ணம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் சிறப்பாக நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை அவரது ஆண்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
leave
அதன் காரணமாக, இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.