Movie prime

ஈக்வடார் நாட்டில் கடும் நிலச்சரிவு!! 16 பேர் உயிரிழப்பு!! 23 பேர் படுகாயம்!!

 
ecuador
ஈக்வடார் நாட்டில் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ecuador
ஈக்வடார் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சிம்போராசோ பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
ecuador
மேலும், 23 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.