Movie prime

அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!!

 
rain leave
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீலகிரி, காஞ்சிபுரம் போன்ற சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.
rain
கடந்த ஜூன் மாதம் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், தற்போது சில நாட்களாக பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
rain
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.