தொடரும் கனமழை!! ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!
Aug 24, 2023, 09:28 IST

பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு வகையான பாதிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. நிலச்சரிவு, வெள்ளம், போன்ற பல்வேறு பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.