அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை!! வானிலை ஆய்வு மையம்!!
Jul 2, 2023, 09:49 IST

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று ஜூலை 2 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை ஜூலை 3 ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜூலை 4 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஜூலை 5 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.