Movie prime

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை!! சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!

 
rain
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலை தணிக்கும் வகையில் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதே போல் கேரளாவில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
rain
இந்நிலையில், கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக, இன்று  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வரும் மே 2 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
rain
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில்  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.