Movie prime

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!! 12 விமானங்கள் தாமதம்!!

 
airport
நேற்று இரவு முதல் விடியும் வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்த காரணமாக, சில இடங்களில் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
rain
இதனால், ஜூலை 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் முக்கிய இடங்களான தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதாப்பேட்டை,  அசோக் நகர், மத்திய கைலாஷ், அடையாறு, திருவான்மியூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
rain
இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சி ஆகிய இடங்களில் இருந்து வந்த விமானங்களும், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தன. மேலும், சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 12 விமானங்கள் தாமதமாக சென்றன.