Movie prime

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது!!

 
rain
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று தமிழ்நாட்டின் சில இடங்களில் லேசாக மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
rain
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியால், இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது.