Movie prime

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!! இன்று 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!

 
rain
தமிழ்நாட்டின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
rain
அதன்படி, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், மற்றும் நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
rain
மேலும், சென்னையை பொறுத்தவரை நகரத்தின் சில பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.