Movie prime

அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம்!!

 
rain
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீலகிரி, காஞ்சிபுரம் போன்ற சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.
rain
கடந்த ஜூன் மாதம் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், தற்போது சில நாட்களாக பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு ஜூலை 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
rain
மேலும், சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.