Movie prime

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம்!!

 
rain

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கேரளா மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

rain

மேலும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.