Movie prime

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை!! வானிலை மையம் அப்டேட்!!

 
rain
தமிழகத்தில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
rain
அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 18 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியில் வரும் 30 ஆம் தேதி அன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.