இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது கனமழை!!

தமிழகத்தில் வரும் 22 முதல் 25 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அரிய்வத்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இன்று முதல் அடுத்த 7 நாட்கள் வரை வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய அரபிக்கடல் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.