Movie prime

அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

 
kids
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், வேலூரில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
rain leave
அதன்படி, வேலூரில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  
kids
இது குறித்து வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் “தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று செப்டம்பர் 21ம் தேதி வியாழக்கிழமை 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். அதே நேரத்தில்  6ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது” எனவும் தெரிவித்துள்ளார்.