இல்லத்தரசிகள் அதிர்ச்சி!! மீண்டும் மீண்டும் அதிரடியாக அதிகரித்து வரும் தக்காளியின் விலை!!
Updated: Jul 5, 2023, 08:25 IST

காய்கறிகளின் விலை அந்தந்த கால நிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி பழம் கிலோ ₹5 வரை விலை குறைந்து விற்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக தக்காளி பழங்களின் விலை கிலோ ₹100 ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள 82 நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. எனினும் மற்ற கடைகளில் தக்காளி ஒரு கிலோ ₹130 க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனால், பிற மாவட்ட மக்கள் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹20 அதிகரித்துள்ளது. அதனால் இன்று தக்காளியின் விலை ஒரு கிலோ ₹150 க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.