Movie prime

ஹெல்மெட் அணிந்தால் ஒரு கிலோ தக்காளி பரிசு!!

 
helmet
ஹெல்மெட் அணிந்து சென்ற 50 நபர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசளித்து பாராட்டிய தொண்டு நிறுவனம். தஞ்சையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வாக நேற்று ஒரு கிலோ தக்காளியை அளித்துள்ளனர். தற்போது தக்காளியின் விலை சற்று அதிகமாக இருப்பதால் இந்த விழிப்புணர்வில் தக்காளியை அளித்துள்ளனர்.
helmet
தஞ்சையில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்து காவல்துறையினர், இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டனர். சாலை விபத்துகளில் அதிகமான உயிரிழப்புகள் தலையில் அடிபடுவதால் தான் ஏற்படுகிறது. அதன் காரணமாக, ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியம், ஹெல்மெட் அணிவதால் உயிரிழப்பை தவிர்க்கலாம்.
tomato
தக்காளி கீழே விழுந்தால் நசுங்கி விடுவது போல, விபத்து ஏற்பட்ட உடனே தலை தான் பாதிக்கும், அதனால் தற்போது விலை உயர்ந்துள்ள தக்காளியை ஹெல்மெட் அனைத்து வந்தவர்களுக்கு பரிசளித்தோம் என்று தஞ்சை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் பொதுமக்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.