பெரும் சோகம்!! 13,500 அடி உயரம் ஸ்கை டைவிங் சாதனை படைத்த மூதாட்டி காலமானார்!!
Oct 12, 2023, 09:24 IST

சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்திருந்தார் 104 வயதான டோரத்தி ஹர்ஃப்னர். கடந்த 1-ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். அவரது இந்த சாதனை உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒட்டாவாவில் ஒரு விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து டோரத்தி குதித்து சாதனை படைத்தார்.

இதன் மூலம், அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்து ஒரு வாரமே ஆன நிலையில், அவர் உயிரிழந்தார். தூக்கத்தில் மூதாட்டி இறந்ததாக அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறினார். மூதாட்டி டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சிகாகோவை சேர்ந்த ஹர்ஃப்னர், முதலாம் உலகப் போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்தவர் அவ்வளவு ஆர்வத்துடன் இந்த சாதனையை செய்தார். எல்லோரும் துடிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியவர். தனது சாதனை குறித்த கின்னஸ் சான்றிதழ் பெறுவதற்குள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.