Movie prime

பெரும் சோகம்!! ரயில் தண்டவாளத்தில் பலியான கல்லூரி மாணவர்!!

 
train suicide
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொட்டியபட்டி பகுதியில் வசித்து வருபவர்  சுப்பிரமணியன். இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கிருஷ்ணகுமார். இவர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில்  பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு முதல் தனது மகனை காணவில்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அவரது அம்மா புகார் அளித்துள்ளார்.
krishnakumar
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  சடலத்தை மீட்டு பார்த்த போது உயிரிழந்தவர் கிருஷ்ணகுமார் என்று தெரியவந்தது. உடலை கைப்பற்றி  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
death
இந்நிலையில் இறந்த கிருஷ்ணகுமார் வீட்டில் ரத்தக்கறை காணப்பட்டதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து விட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து   தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.