Movie prime

பெரும் அதிர்ச்சி!! ஒரே மாதத்தில் உயிரிழந்த 9 புலிக்குட்டிகள்!!

 
death tiger cub
நீலகிரி மாவட்டத்தில் வனச்சரகத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். குறிப்பாக புலிகள் குட்டிகளுடன் இணைந்து உலா வருவதை அவ்வப்போது சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வாய்ப்பு கிட்டும். சமீபகாலமாக இங்கு புலிகள் விஷம் வைத்தோ வேட்டையாடியோ கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் ஒரு பெண் புலிக்குட்டி உயிரிழந்த நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டது.  
tiger cubs
வனத்துறையினர் அதை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். அத்துடன் தாய் புலியை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை சீகூர் வனச்சரக எல்லையில் மேலும்  2  குட்டி புலிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன. உடல்களை மீட்ட போது, அவற்றில் ஒரு பெண் புலிக்குட்டி உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர். அதை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் முதுமலை கால்நடை மருத்துவர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த 3 குட்டிகளும் பிறந்து 2 மாதங்களே ஆனவை.
tiger cub died
புலிக்குட்டிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் தாய் புலி உயிருடன் உள்ளதா அல்லது உயிரிழந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து, தாய் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 குட்டி புலிகள் உட்பட 9 புலிகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.