Movie prime

பெரும் அதிர்ச்சி!! சார்ஜ்ரால் பறிபோன 8 மாத குழந்தை!! கதறும் பெற்றோர்கள்!!

 
death
சிறு அலட்சியம் கூட நம் வீட்டில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகாவில்  உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர் சந்தோஷ் கல்லுட்கர். இவர் ஹெஸ்காம் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து  வருகிறார். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். சஞ்சனா 3 ஆவதாக கர்ப்பமாக இருந்தார். 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை  சானித்யா வீட்டில் பெட்டில் படுத்து கிடந்தது.
charger
அப்போது குழந்தையின் அருகே செல்போன் சார்ஜர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. சார்ஜரின் ஒரு முனை பிளக்பாயிண்டில் சொருகி சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் இருந்தது. அந்த குழந்தை செல்போன் சார்ஜரை தனது வாயில் வைத்தது. செல்போன் சார்ஜர் வழியாக குழந்தையின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த குடும்பத்தினர் கதறி துடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
death
மற்றொரு குழந்தையின் பிறந்த தினமான இன்று பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தயாராக வேண்டிய வீடே சோகமயமானது. வேலைக்கு சென்றிருந்த சந்தோஷுக்கு இது குறித்து   தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்த அவர் குழந்தையின் உடலை பார்த்து மயங்கி விழுந்தார். இதையடுத்து சந்தோசும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கார்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சார்ஜரை வாயில் வைத்து குழந்தை  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.