வரலாறு காணாத கொளுத்தும் வெயில்!! தவிக்கும் மக்கள்!!

தற்போது தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகப்படியாக உள்ளது. அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, ஸ்பெயின், போலந்து, ஜெர்மனி, கிரீஸ் போன்ற நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அந்த நாடு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இனி வரும் நாட்களில் வெப்ப அலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.