செம்மொழி பூங்கா அருகே அமைக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா!!
Updated: Aug 17, 2023, 09:56 IST

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா அருகே புதிதாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கதீட்ரல் சாலையில் தாவரவியல் பூங்காவான செம்மொழி பூங்கா அமைந்துள்ளது.

இந்த செம்மொழி பூங்காவிற்கு அருகில் சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களின் வடிவத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில் ₹25 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

மேலும், செம்மொழி பூங்காவையும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவையும் இணைக்கும் வகையில் இணைப்பு பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.