Movie prime

கன்னியாகுமரி வேலம்மாள் பாட்டி மரணம்!! முதல்வர் இரங்கல்!!

 
vellammal
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலம்மாள் என்ற 92 வயது பாட்டி ஒருவர் உள்ளார். கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தமிழக அரசு கொரோனா நிவாரண தொகை வழங்கியது.
vellammal
அப்போது, அரசு வழங்கிய கொரோனா நிவாரணத்தொகையை வேலம்மாள் பாட்டியும் பெற்றார். அப்போது, அரசு வழங்கிய கொரோனா நிவாரணத்தை பெற்றபோது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் வேலம்மாள் பாட்டியின் புன்னகை அமைந்தது.அவரது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு பாடி பிரபலமடைந்தார். இந்நிலையில், இன்று வேலம்மாள் பாட்டி வயது முதிர்வு மற்றும் உடல்நலமின்றி உயிரிழந்துள்ளார்.
M.K.Stalin
இவரது மறைவு செய்தி குறித்து அறிந்த முதல்வர், அரசு வழங்கிய கொரோனா நிவாரணத்தை பெற்றபோது மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தது வேலம்மாள் பாட்டி புன்னகை, மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த வேலம்மாள் பாட்டி தனது புன்னகை வழியாக என்றும் நம்மிடம் நிலைத்திருப்பர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.